ஜேர்மனியில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அன்று நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களுக்குப் பின்னர் சுமார் ஆயிரம் இஸ்லாமியவாதிகளை அந்நாட்டு அரசு கண்காணித்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருபது இஸ்லாமியவாதிகளையும், சில வலதுசாரித் தீவிரவாதிகளையும் வன்முறைத் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கண்காணித்து வருகின்றது.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மூலமாக சுமார் 84 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து ஜேர்மனி வன்முறைத் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து நீதித்துறை அமைச்சர் சபீனா லியுதியூ(Sabine Leuthe)கூறுகையில், ஜேர்மனியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றும் இதில் சிறிதும் தளர்ச்சி ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.