நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
|
தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக பரவிவரும் தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
|
ஜெயலலிதாவால் முடியும்போது என்னால் ஏன் முடியாது? கீதா குமாரசிங்க!
Labels:
அரசியல் தலைவர்கள்
Post a Comment