கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பரவியிருக்கும் விஷக்கிருமியானது இன்புளுவொன்சா ஏ என்ற வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு நேற்று மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு இன்புளுவொன்சா ஏ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
காசல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.
இந்த வைரஸ் அடிக்கடி பரவும் வைரஸ் எனவும் வருடத்தில் பல தடவைகள் இந்த வைரஸ் பரவுகிறது எனவும் கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரசினால் பீடிக்கப்படுவர்கள் இரண்டு பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இயற்கை எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
குறித்த வைரஸை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment