5 வயது சிறுமியை கற்பழித்தவன் ஏற்கனவே மனைவியையும் கற்பழிதே திருமணம் செய்து கொண்டவனாம்.. (PHOTOS & VIDEO)



Print Friendly
rape-1டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த  வயது கொடூர இளைஞன் ஏற்கனவே தனது மனையையும் திருமணத்திற்கு முன்பே கற்பழித்தவனாம்,  பின்பு அந்த அபலை பெண் பீகார் சிட்கௌன கிராமத்து பஞ்சாயத்தில் முறையிட்டாள் . 
அந்த கூறுகெட்ட பஞ்சாயத்து அந்த கொடியவனையே திருமணம் செய்யுமாறு,  இருவரையும் சேர்த்து வைத்தது , கலாசாரம் பாதுகாக்க படவேண்டும் என்ற அறிவுரையோடு இந்த கொடுமையை அரங்கேற்றி அந்த காம கொடுரனின் வேட்டைக்கு ஒரு சமுக மரியாதையும் கொடுத்ததுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் அவனை  ஒரு ஹீரோ  ஸ்தானத்திற்கு அந்த ஆணாதிக்க சமுகம் உயர்த்தி வைத்ததுள்ளது.  மனோஜ்குமார என்ற கொடியவனால் த கற்பழிக்கப்பட்டு அதன் மூலம் மனைவி என்ற தண்டனையை பெற்ற அவனது மனைவி  அவனை விடுதலை செய்ய சொல்லி   தற்போது  போலீசிடம் கேட்கிறாளாம்
ஆனால் பஞ்சாயத்து பெருசுகளோ அவனை தூக்கில் போடு மாறு சொல்கிறார்களாம் . கூடவே அந்த பஞ்சாயத்துக்களையும் கொஞ்ச நாள் திகாரில் போட்டால் தேவல..
5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டாவது குற்றவாளி இன்று காலை பீகாரில் கைது ..

டெல்லி காந்தி நகர் ஏரியாவில் கடந்த வாரம் 5 வயது சிறுமி காணாமல் போனார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில்  சிறுமியின் வீட்டை  ஒட்டிய  மற்றொரு வீட்டின் அறையிலிருந்து  அழுகுரல் கேட்டது.  பூட்டியிருந்த  அந்த வீட்டை  உடைத்து  உள்ளே சென்று  பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிறுமி சேர்க்கப்பட்டாள்.
மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் குடியிருந்த மனோஜ்குமார் ஷா என்பவர் தலைமறைவானார். செல்போன் நம்பரை வைத்து அவர் பீகாரில் மாமியார் வீட்டில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து தனிப்படை பீகார் விரைந்தது. கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மனோஜ்குமாரின் நண்பர் பிரதீப்புக்கும் பலாத்காரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.
rape-1
இவரை தேடி டெல்லி தனிப்படை போலீசார் நேற்று பீகார் விரைந்தனர். இன்று அதிகாலை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீஸ் துணையுடன் பிரதீப் கைது செய்யப்பட்டார். அவர் இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்.
இதற்கிடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்திருப்பதை தொடர்ந்து கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்தல் பிரிவின் கீழ் மனோஜ்குமார் மற்றும் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் பிரதமர் வீடு, சோனியா இல்லம், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை, இந்தியா கேட் ஆகிய இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி அனுபவித்த சொல்ல முடியாத கொடுமைகள்!!
டெல்லி: டெல்லியில் 2 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15ம் தேதி தனது வீட்டு வாசலில் இருந்து கடத்தப்பட்டார். அதே குடியிருப்பில் தரைதளத்தில் இருக்கும் பீகாரைச் மனோஜ் குமார்(22), அவரது கூட்டாளி பிரதீப்புடன் சேர்ந்து சிறுமியை 2 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்தார்.
கடந்த புதன்கிழை மாலை சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து வெளியே பூட்டப்பட்டிருந்த அறையை திறந்தபோது சிறுமி பரிதாபமான கோலத்தில் இருந்தார். இதையடுத்து சுவாமி தயானந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமிக்கு நடந்த கொடூரங்கள்:
சிறுமியை மனோஜ் மற்றும் பிரதீப் இயற்கைக்கு புறம்பான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் சிறுமியின் மர்ம உறுப்புகளை சேதப்படுத்தியுள்ளனர்.
மர்ம உறுப்புகள் வழியாக சிறுமியின் உடலுக்குள் 200 மில்லி லிட்டர் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை திணித்துள்ளனர்.
மருத்துவர்கள் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை அகற்றிவிட்டனர்.
ஒரு 5 வயது சிறுமிக்கு இவ்வளவு கொடுமை நடந்துள்ளதை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என்று சுவாமி தயானந்த் மருத்துவமனை அதிகாரி ஆர்.கே. பன்சால் தெரிவித்தார்.
சிறுமியின் மர்ம உறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும்.
சிறுமியின் குடலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger