கலந்துகொள்வது உறுதி




மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கலந்துகொள்ளவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிற் சங்க பிரதிநிதிகளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இன்று திங்கட்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மானசீக ரீதியான ஆதரவு வழங்கப்படும். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியற் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தொழிற் சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என அவர் குறிப்பிட்டார்.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்பட்ட வேண்டும் என கட்சியின் அதியுயர் பீட கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்ட ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger