லண்டன் மற்றும் குவைத்தில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் அந்நாடுகளின் இலங்கைத் தூதரகங்களுக்கு முன்னால் ஒன்று திரண்டு முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட்டம் நடாத்தி இருக்கின்றார்கள்.
சுமார் 200 க்கும் மேற்பட்ட குவைத் வாழ் இலங்கை சகோதர்கள் குவைத் – ஜாப்ரியா வில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் ஒன்று கூடி இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பௌத்த பிக்கு காடையர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இதேவேளை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் ஒன்று திரண்ட முஸ்லிம்கள் சிங்களக் காடையர்களுக்கு எதிராக பலத்த கோஷங்களை எழுப்பி குரல் கொடுத்து வருகின்றனர்.
குறித்த இரு ஆர்ப்பாட்டங்களிலும் இலங்கை வாழ் தமிழர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment