பொதுபல சேனா சரியான வழியில் பயணிக்கவில்லை : தலைவர் விமலஜோதி தேரர்



பொதுபல சேனா சரியான வழியில் பயணிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கிரம விமலஜோதி தேரர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் தனது கட்டுப்பாட்டையும் மீறி செயற்படுவதாகவும். அவர் பாவிக்கும் சில வார்த்தைகளால் பலரது மனங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து பல முறை நிர்வாக கூட்டங்களில் எடுத்துக் கூறியும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அளுத்கம, தர்காநகர் சம்பவங்களின் பின்னர் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக வந்த செய்தி தொடர்பில் வினவியபோது, சம்பவம் நடந்துவிட்டது (அஸ்வயா கிஹின் இவரை) எனவே உடனடியாக விலக முடியாது. என்றாலும் வெகு விரைவில் தீர்மானம் ஒன்றை எடுப்பேன் என் அவர் தெரிவித்தார். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger