யாழ். பாடசாலைகளில் கண் பரிசோதனையென்ற பெயரில் பணம் அபகரிப்பு / (VIDEO) களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது / அரசியல் தீர்வு, ராஜபக்ஷ – சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக் கூடாது -ஜனாதிபதி

 

யாழ். பாடசாலைகளில் கண் பரிசோதனையென்ற பெயரில் பணம் அபகரிப்பு-
யாழ். வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தனியார் கண் பரிசோதனையென்ற பெயரில் மாணவர்களிடம் பெரும் தொகைப் பணத்தை அபகரிப்பதில் ஒரு தனியார் கண்ணாடி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்வதாகக் கூறி பாடசாலைகளுக்குள் பிரவேசிக்கும் குறித்த நிறவனம் மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்து விட்டு கண்ணாடி போட வேண்டும் என கூறுகின்றனர்.
அதனை அடுத்து குறிப்பிட்ட தொகையை கொண்டு வந்து முதலில் கட்டுங்கள் என்று கூறி பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் விசனமடைந்துள்ளனர்.
கடந்தாண்டும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த குறிப்பிட்ட நிறவனம் அரச திணைக்களங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பணிமனைகளுக்குச் சென்று இத்தகைய முயற்சியில் ஈடபட்டு பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டதுடன் தரமற்ற கண்ணாடிகளை வழங்கிச் சென்றதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டதை தெரிந்த அதிபர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்காத போதிலும் பின்தங்கிய இடங்களில் உள்ள அதிபர்கள் நிலைமை தெரியாது அனுமதித்து சிக்கலில் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(VIDEO) களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது-
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்களின் விடுதியொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு மருத்துவ பீட மாணவர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்ளக மட்டத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக உபவேந்தர் கூறியுள்ளார்.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் விடுதிமீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அரசியல் தீர்வு, ராஜபக்ஷ – சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக் கூடாது -ஜனாதிபதி-
தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் நிறைவான அரசியல் தீர்வொன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அது ராஜபக்ஷ – சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. அரசியல் தீர்வு ராஜபக்ஷ – சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக் கூடாது’ என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரை இன்று அலரிமாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger