அமெரிக்காவில் சாகச நிகழ்ச்சியில், விமானம் விழுந்து நொறுங்கியது / (PHOTOS) விதைப்பையில் 10 கல்லுடன் அவதிப்பட்ட நபர்: அறுவைச் சிகிச்சைக்குப் பின் புதிய வாழ்க்கை


விதைப்பையில் 10 கல்லுடன் அவதிப்பட்ட நபர் : அறுவைச் சிகிச்சைக்குப் பின் புதிய வாழ்க்கைவிதைப்பையில் 10 கல்லுடன் அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் வைத்தியர்கள்.
அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் 2008ஆம் ஆண்டு படுக்கையிலிருந்து எழும் போது தவறுதலாக அவரது ஆணுறுப்பு கட்டிலுடன் மோதியுள்ளது.
இதன் பின்னர் அவரது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் விதைப்பை பெரிதாக வீங்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அவரால் இயல்பாக நடக்கவோ வாகனம் செலுத்தவோ உடலுறவு கொள்ளவோ முடியாத ஒரு அசாதாரண நிலைக்கு ஆளாகியுள்ளார் வெஸ்லி வரென்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவரது விதைப்பையின் வீக்கம் மிக அதிகமானபோது அதனை 13 மணி நேர அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் வைத்தியர்கள்.
இது குறித்த தகவல்களை நேற்றைய தினமே அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன. இதேவேளை 13 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை சனல் 4 தொலைக்காட்சி முழுமையாக படம் பிடித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வரென் கூறுகையில், சத்திர சிகிச்சையின் மூலம் புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளேன். மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
எனது மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. எனது வாழ்க்கை மீட்டுத்தந்தமைக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
042அமெரிக்காவில் சாகச நிகழ்ச்சியில், விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 2 பேர் பலிஅமெரிக்காவில் ஒகியோவில் டயான் சர்வதேச விமான நிலையத்தில் 39-வது விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அதை காண விமான நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர்.
அப்போது, ஒரு விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் இறக்கைகளின் மீது ஏறி ஜேன்விக்கர் என்ற பெண் சாகசம் நிகழ்த்தினார். விமானி சார்லஸ் ஸ்வென்கர் விமானத்தை ஓட்டினார்.
அவர் விமானத்தை மேலேயும், கீழேயுமாக பல கோணங்களில் ஓட்டி சாகசம் நிகழ்த்தினர். அப்போது திடீரென விமானம் தலைகீழாக பாய்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் வெடித்து சிதறி அதிலிருந்து பெரிய பந்து போன்று நெருப்பு கிளம்பியது.
அந்த நெருப்பில் சிக்கி விமானி சார்லஸ் ஸ்வென்கர் மற்றும் விமான இறக்கையில் அமர்ந்து சாகசம் புரிந்த ஜேன்விக்னர் என்ற பெண்ணும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது. எனவே இது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
(PHOTOS) விதைப்பையில் 10 கல்லுடன் அவதிப்பட்ட நபர்: அறுவைச் சிகிச்சைக்குப் பின் புதிய வாழ்க்கை….1044_newsthumb_thum
041


 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger