அவுஸ்திரேலியாவின் சிட்னியில் முத்தத்துக்கு, இலவசமாக கோப்பி! - வணிக நோக்குக்காய் பலிகடாவாக்கப்படும் வெட்கவுணர்வு / ஆளில்லா விமானம் மூலம் ‘பிட்சா’ டெலிவரி செய்ய ‘டோமினோஸ்’ திட்டம்

 


அவுஸ்திரேலியாவின் சிட்னியில் முத்தத்துக்கு இலவசமாக கோப்பி!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கடையொன்று முத்தத்துக்கு இலவசமாக கோப்பி வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது இம்மாதம் மாத்திரம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகின்றது.
இதன்படி கடைக்கு வரும் திருமணமான தம்பதிகள் அல்லது காதலர்கள் தமக்கிடையே முத்தத்தை பரிமாறிக்கொண்டால் அவர்கள் அருந்தும் கோப்பிக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இது தொடர்பில் காணொளியொன்றையும் குறித்த கடையின் உரிமையாளர் வெளியிட்டுள்ளார்.
முத்தம் உண்மையானதா? அல்லது கோப்பிக்காக போலியாக வழங்கப்படுகின்றதா? என தான் கூர்ந்து அவதானிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தம்பதியினரிடையே அன்பை மீண்டும் புத்துணர்வு பெறச் செய்யும் நோக்குடனேயே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
இக்கடைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
022ஆளில்லா விமானம் மூலம் ‘பிட்சா’ டெலிவரி செய்ய ‘டோமினோஸ்’ திட்டம்-
‘பிட்சா’ தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ‘டோமினோஸ்’ ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற ‘இன்சுலேட்’ செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
‘டோமிகாப்டர் டிரோன்’ எனப்படும் இந்த ஆளில்லா விமானங்களை ‘ஏரோ சைட்’ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
அமெரிக்காவில், தரை மட்டத்தில் இருந்து 126 மீட்டர் வரை சிறியரக விமானங்கள் பறப்பதற்கு தடை ஏதுமில்லை என்பதால் இந்த திட்டம் தங்களது வியாபார வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் என டோமினோஸ் கருதுகிறது.
மின்னணு சக்தியில் இயங்கும் திசைகாட்டி, இடங்களை வரைபடத்தின் வாயிலாக புரிந்துக் கொள்ளும் ஜி.பி.எஸ். கருவி ஆகியவை இந்த ஆளில்லா விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
‘தரையில் இருந்தபடியே ரிமோட் மூலம் இந்த விமானங்களை இயக்கி, குறுகிய நேரத்தில் பிட்சாக்களை டெலிவரி செய்யும் உலகின் முதல் சாதனை முயற்சி நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று டோமினோஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger