பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் திருத்தங்கள்: சாதித்துவிட்டேன் என்கிறார் விமல்


இக் கூட்டத்தில் 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி   அதிகாரங்களில் திருத்தங்களை  செப்டம்பர் மாதத்துக்கு முன் உச்ச நீதிமன்றம் மற்று சட்டமன்றத்தின் திணைக்களத்தின் ஊடாக திருத்தப்பட்டு  சட்ட ஆலோசனைகளைப்  பெற்றபின் அதனை ஜனாதிபதி  அமுல்படுத்த உள்ளார் . என  தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (4) நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது  13வது திருத்தமும் வடக்குத் தேர்தல்  பற்றியும் ஆராயப்பட்டது.என்பது  குறிப்பிடத் தக்கது.
இன்று(5) பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அவர் தகவல் தருகையில் மேற்படி விடயம் சம்பந்ததமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அணைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட  கூட்டத்தினை மீள ஆரம்பித்து இவ் விடயம் சம்பந்தமாக மேலும் ஆராயப்பட உள்ளது.   இக் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வராவிட்டாலும் மேற்படி விடயங்கள் ஏனைய கட்சிகளுடன்  ஆராயப்படும்.

மே தினத்தில் இருந்து எமது கட்சி பொலிஸ், மற்றும் இடம் அதிகாரம் இல்லாது வடக்கில் தேர்தல்  நடாத்தவேண்டும் என நாடு பூராகச் சொல்லி வருகின்றோம்;.  அத்துடன் 10 இலட்சம்பேரது கையெழுத்து வேட்டை நாடு பூராவும் நடைபெற்று வருகின்றது. எதிர்ரும் 12ம் திகதி கொழும்பில் வைத்து இக் கையொழுத்து வேட்டைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரச கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  இவ்விடயம் சம்பந்தமாக ஏனைய கட்சிகள்   எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டதா என ஊடகவியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் அமைச்சர் வாசுதேவ நானயக்கார தான் சுகயீனமாக உள்ளதாக முன்கூட்டியே சென்று விட்டார். அமைச்சர் டக்லஸ் தேவாநாந்தா  கருத்து தெரவித்தபோதும் அவர் அணைத்துக் கட்சி கூட்டுவதை ஆதரித்துப் பேசினார். ஏனைய கட்சிகள் எதுவும் இவ் விடயத்திற்கு எதிராக பேசவில்லை என தெரிவித்தார்.

ஆகக் குறைந்தது 13வது திருத்தத்தை  திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு ஐனாதிபதியும் அரசும் இறங்கியுள்ளதையிட்டு நாம் வெற்றிகண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இருந்தும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 17, 18ம் திருத்தம் ஊடாக பொலிஸ் கொமிசன் கொண்டுள்ளதாக தெரிவித்தார். 13வது திருத்தத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை தெரிவித்த உடனே எனது எதிர்ப்பை தெரிவித்தேன். அதன் பின்பே ஜனாதிபதி  மேற்படி திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ஊடாக திருத்துவதற்கு இணங்கியதாகவும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger