மனிதக் குரங்கு எடுத்த புகைப்படங்கள் 44 லட்சம் ரூபாய்க்கு ஏலம் / இங்கிலாந்து பிச்சைக்காரனுக்கு ரூ. 2 கோடி பங்களா / வீட்டையே ஜெயிலாக மாற்றி முஷரப்பிடம் விசாரணை

 

மனிதக் குரங்கு எடுத்த புகைப்படங்கள் 44 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
லண்டனை சேர்ந்த சோதேபை என்ற ஏல நிறுவனத்தில் நேற்று அரிய வகை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் மனித குரங்கு எடுத்த புகைப்படங்கள் 50 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 44 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த விடாலி கோமர், அலெக்சாண்டர் மேலமிட் ஆகிய இருவரும் இணைந்து 1990-ம் ஆண்டு மிக்கி என்ற மனித குரங்குக்கு புகைப்படம் எடுக்க பயிற்சி அளித்தனர். இந்த குரங்கு ரஷ்யா நாட்டின் சர்க்கஸ் குழு ஒன்றில் சாகசம் நடத்தி வந்தது. இந்த குரங்கு எடுத்த தெளிவில்லாமல் தெரியும் மாஸ்கோவின் செஞ்சதுக்கம், சர்ச் புகைப்படங்கள் மட்டுமல்லாமல், குரங்கின் புகைப்படமும் ஏலம் விடப்பட்டது.
இந்த புகைப்படங்களை ரஷ்யாவைச் சேர்ந்த கலைப் பொருட்களை சேகரிக்கும் கிரா பெலான்சைக் ஏலத்தில் எடுத்தார். இந்த புகைப்படம் குறித்து கூறுகையில், ‘கருத்தியல் கலைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.’ என்றார்.
இந்த பெருமைக்கு சொந்தமான மனித குரங்கு கடந்த 2007-ம் ஆண்டு இறந்து போனது குறிப்பிடத்தக்கது.
pak.musharrafவீட்டையே ஜெயிலாக மாற்றி முஷரப்பிடம் விசாரணை: பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு விசாரணையை பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. முஷரப் மீதான நீதிபதிகள் சிறை வைக்கப்பட்ட வழக்கு போன்றவற்றை தீவிரவாத எதிர்ப்பு நீதிபதி கவுகர் அப்பாஸ் ஜைடி விசாரிக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களாக அவர் முஷரப் வீட்டுக்கு சென்று வழக்கு விசாரணையை தொடங்கலாம். இதற்காக முஷரப்பின் பண்ணை வீட்டை தற்காலிக ஜெயிலாக மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முஷரப் வீட்டுக்கு செல்லும் நீதிபதிக்கு குண்டு துளைக்காத கார் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
008இங்கிலாந்து பிச்சைக்காரனுக்கு ரூ. 2 கோடி பங்களா-
இங்கிலாந்தை சேர்ந்த நெட்வெஸ்ட் நகரை சேர்ந்தவர் சிமான்ரைட் (வயது 37). இவர் தினமும் அங்குள்ள பாங்கி முன்பு அமர்ந்து பிச்சை எடுத்து வந்தார்.
காலையில் 9 மணிக்கு பிச்சை எடுக்க வரும் அவர் மாலை 6 மணிக்கு வீடு திரும்பி விடுவார்.
இதையே தினசரி தொழிலாக அவர் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பில் பங்களா வீடு ஒன்று கட்டி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு அவருக்கு பிச்சை எடுக்க தடை விதித்தது.
சிமான்ரைட்டுக்கு தினமும் ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரம் வரை பிச்சை எடுப்பதன் மூலம் வருமானம் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger