நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் / 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் மீது விசாரணை

 

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்-
நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
நேற்றிரவு வருகை தந்த இவர் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நியூசிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு ஆகியன தொடர்பில் மரே மெக்கலி கவனம் செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் மீது விசாரணை-
தனியார் பஸ்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 அவசர இலக்கத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்று 200க்கும் அதிகமான பொதுமக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளன.
இதன் போது தனியார் பஸ் சேவையில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டதோடு அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
பயணிகளின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்ட போதும் சில தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிர்வாகக் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
சில சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு கட்டாய தண்டனைப் பயிற்சி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிட்டமை, பயணிகளை மோசமாக நடத்தியமை கவனயீனமாக வாகனம் ஓட்டியமை, குளிரூட்டி உரியபடி செயற் படாமை, அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்டமை உட்பட பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger