தமிழ்நாட்டில் +2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1000 மதிப்பெண்கள் எடுத்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாணவ மாணவிகளிடம் சமூகம் தேவைக்கதிகமாக எதிர்பாக்கும் தவறான அணுகுமுறையின் விபரீத பின்விளைவே என்கிறார் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய சுமார் எட்டரைலட்சம் மாணவ, மாணவிகளில் சுமார் 88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
அதேசமயம், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையிலும், தாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றதை தாங்க முடியாமல் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி தற்கொலை செய்துகொண்ட மாணவிகளில் ஒருவர் 1200 மதிப்பெண்களுக்கு1063 மதிப்பெண்களும், மற்றவர் 990 மதிப்பெண்களும் பெற்றிருந்த நிலையிலும் இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
+2 தேர்வில் மொத்தமுள்ள1200 மதிப்பெண்களுக்கு, 1000 மதிப்பெண்கள் எடுத்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாணவ மாணவிகளிடம் பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் தேவைக்கதிகமாக எதிர்பாக்கும் தவறான அணுகுமுறையின் விபரீத பின்விளைவுகளை குறிப்புணர்த்துவதாக கூறுகிறார் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன்.
Post a Comment