கிழக்கு மாகாணத்தின் நிர்வாக சேவை தற்போது வெகுவாக சிங்கள தலைமைத்துவங்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருவதனையிட்டு கிழக்குவாழ் மக்கள் மிகுந்த அதிருப்தி வெளியிடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என வர்ணிக்கப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபர் முண்னாள் இராணுவ கட்டளைத் தளபதியாகும்.
கச்சேரியில் இருக்கின்ற மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராச அவர்களின் எந்தவித கருத்துக்களும் அரசாங்க அதிபரினால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை மாவட்டத்தின் அனைத்து முடிவுகளையும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்க அதிபருமாக கடமை புரிந்து கொண்டிருப்பவர்தான் முடிவெடுத்து செயற்பட்டுக் கொண்டு இருப்பதனால் மாவட்ட மக்களுக்கு பெரும் அவதியாய் உள்ளது.
அதுபோல கிழக்கு மாகாணத்திற்குரிய பிரதம செயலாளராக கடமை புரிந்த தமிழர் ஒரவரை நீக்கிவிட்டு தற்போது டி.எம்.சரத்.அபய குணவர்த்தன என்பர் நியமிக்கப் பட்டுள்ளார்.
அது போன்று கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக என்.எ.ஏ.புஷ்பகுமார நியமிக்கப்பட்;டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைவிட அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து சிங்களவர் ஒருவர்தான் பதவி வகித்து வருகின்றார். இதானல் அம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களும் ஏனைய முஸ்லிம் மக்களும் தமது தேவைகளையும் சேவைகளையும் பெறுவதில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவையனைத்திற்கும் மேலாக கிழக்குமாகாண ஆளுனர்: றியல் அட்மிறல் மொகான் விஜய விக்கிரம அவர்கள் முன்னாள் இராணுவத்தளபதி தற்போது கிழக்கின் நிர்வாகம் அனைத்தினையும் தம்வசம்படுத்தி வைத்துள்ளார்.
ஏந்தவித நியமனங்களோ அல்லது செயற்பாடுகளோ கிழக்கு அளுனரின் அனுமதியின்றி கிழக்கு மாகாணசபை அமைச்சர்களோ அதிகாரிகளோ முன்நெடுக்க இடம் கிடையாது அப்படி ஏதாவது இடம்பெற்றால் அத்திட்டம் தடுக்கப்படும் என்பது நியதியாகி விட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வானிலை உதவி அதிகாரி ஒருவர் சிங்களவராகவும் தேர்தல் கடமை அதிகாரி சிங்களவராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதனைவிட கிழக்கிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளினதும் , கம்பனிகளினதும் பிரதம முகாமையாளர்கள் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவையனைத்தினையம் பார்க்கும்போது கிழக்கின் நிர்வாகங்களை மெல்ல மெல்ல சிங்கள மயமாக்கிக் கொண்டு வருவதானது மக்கள் மனங்களில் பெரும் கவலையையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment