கடற்படை தாக்குதலில் இந்திய மீனவர்கள் காயம் / உறவை மேம்படுத்த சீனா இந்தியா உடன்படிக்கை / அவுஸ். செல்வதற்கு தென்னிந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் இலங்கையர்கள்


 

Ind.tamilnaduஉறவை மேம்படுத்த சீனா இந்தியா உடன்படிக்கை-
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு மிரட்டியது. தெப்சாங் பகுதியில் இந்தியா பதுங்கு குழிகள் அமைக்காது என்ற உறுதியை அடுத்து சீனா ராணுவம் வெளியேறியது.
இந்நிலையில் சீனா சென்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்து புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.
பின்னர் குர்ஷித் கூறியதாவது:- 2006-ம் ஆண்டு ஒப்பந்தப்படி இரு நாடுகளின் உரையாடல் வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
இரு நாடுகளின் வெளியுறவு மட்டத்தில் பேசப்படும் புதிய ஒத்துழைப்பு செயல்முறைகள் குறித்து உரிய காலத்தில் செய்தியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சீனாவுடன் ஏற்படும் கவலையளிக்கக்கூடிய விசயங்களை குறிப்பாய் வர்த்தக உறவுகள் குறித்து எடுத்துரைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இன்னும் சில தினங்களில் சீனா வெளியுறவு அதிகாரிகள் டெல்லி வந்து இந்த புதிய ஒத்துழைப்புகள் குறித்து உறுதி செய்வார்கள்.
கடற்படை தாக்குதலில் இந்திய மீனவர்கள் காயம்-
கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர்.
இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ஹஹஇலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவு அருகே, மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அவுஸ். செல்வதற்கு தென்னிந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் இலங்கையர்கள்-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தென்னிந்தியாவின் கொச்சி, கலிகட், திருவனந்தபுரம் உள்ளிட்ட சில துறைமுகங்களை பயன்படுத்துகின்றமை தெரிய வந்துள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்திலில் ஈடுபடுபவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களை தமிழகத்திலிருந்து குறித்த துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து படகுகள் மூலம் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுளளது.
தமிழகத்தின் கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் புகலிடக் கோரிக்கையாளர்களை கேரள துறைமுகங்கள் ஊடாக அனுப்ப வைக்க ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் பழகியுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger