அன்புச் சகோதரர்களே,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், கருணையும் உண்டாகட்டுமாக!
பல்லின மக்கள் கலந்து வாழும் நம் இலங்கைத் திருநாட்டின் இப்போதைய கட்டாயத் தேவை
சமாதானம்! சமூக ஐக்கியம்!
ஐக்கியம் உண்டாவதற்கு அடிப்படையில் இருக்க வேண்டியது
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு!
நம்மோடு கலந்து வாழும் அடுத்த இனத்தவரது மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற அடிப்படை அம்சங்களைப் பற்றி நாம் சரிவரத் தெரிந்து கொண்டால் தான் அவர்களது உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களோடு பழக முடியும். இவ்வாறு நாம் செய்யும் போது அவர்களும் அதே போல் நம் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நம்மோடு பழகத் தொடங்குவார்கள். இது தான் பரஸ்பரம் புரிந்துணர்வு என்பது.
இவ்வாறான புரிந்துணர்வு மூலம் இனங்களுக்கிடையில் ஏற்படும் சகோதர பிணைப்பு மிகவும் வலுவானது, பிரிக்க முடியாதது. இந்த தேசத்தை அழிக்க நினைக்கும் பிற நாட்டு சக்திகள் இன்று நமக்கு மத்தியில் இருக்கும் இந்த ஐக்கியத்தைத் தான் அழித்தொழிக்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்க எத்தனிக்கின்றன. இதன் முதற்கட்ட நடவடிக்கை தான் இன்று இலங்கையில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மை சகோதரர்களைத் தூண்டி விட முயற்சிக்கும் நிகழ்வுகள். மத வழிபாட்டுத் தளங்களினுள் அத்துமீறி நுழைதல், ஹலால் விவகாரம், ஹிஜாப் பிரச்சினை என்று ஒன்றன் பின் ஒன்றாக புதுப்புது பிரச்சினைகள் தினம் தினம் இந்நாட்டில் முளைத்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஒருசில மத குருமார்களை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு மர்மக் கும்பல் தான் இவை அனைத்தையும் திரைமறைவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது சிந்திக்கின்ற நம் அனைவருக்கும் தெளிவாக விளங்குகிறது. இவர்களின் சதி வலைகளுக்குள் நாம் வீழாமல் இருக்க வேண்டுமென்றால், நம் இனங்களுக்கு மத்தியிலிருக்கும் புரிந்துணர்வை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்நாட்டின் சமூக ஐக்கியத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக இனங்களுக்கு மத்தியில் வெறுப்பையும், குரோதத்தையும் வளர;ப்பதற்காக இன்று நாடு முழுவதும் பரப்பப்பட்டு வரும் பொய்யான பிரச்சாரங்களைப் பற்றி நாம் அனைவரும் தெளிவாக விளங்கி வைத்திருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி பலவிதமான பொய்களும், அவதூறுகளும் இன்று ஊடகங்கள் (Media) வழியாக நாடு முழுவதும் பரப்பப் படுகிறது. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் சரியான பதில்களும், விளக்கங்களும், வழங்கப்படாமல் போனால், நாளடையில் இந்த நச்சுக் கருத்துக்கள் நம் சகோதரர்களாகிய உங்கள் உள்ளங்களிலும் நம் மீதான வெறுப்பை வளர்க்கும். இதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த நமக்கிடையில் இது இறுதியில் தீராத பகையை ஏற்படுத்தி விடும். இந்த நாட்டை நேசிக்கும் நம்மில் எவரும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
ஆகவே, இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவைப் பெற்றுத் தரும் விதமாக உங்களுக்காகவே நாம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி தான்…
Post a Comment